நோயெதிர்ப்பு சக்தியை பல மடங்காக அதிகரிக்கும் புதினா டீ

உடலில் உள்ள கெட்ட கொழுப்புகளை வெளியேற்றுவதில் புதினா முக்கியப்பங்கு வகிக்கிறது.

தினமும் புதினா டீ அருந்துவதால் நோய் எதிர்ப்பு சக்தி 100 மடங்கு வேகத்தில் அதிகரிக்கும்.

நீங்கள் சோர்வாக இருக்கும் போது புதினா டீ அருந்துங்கள். நொடியில் மாற்றத்தினை உணரலாம்.

தேவையான பொருட்கள்

புதினா இலை – 7
தேயிலை – ஒரு டீஸ்பூன்
தேன் அல்லது பனங்கற்கண்டு – ஒரு டீஸ்பூன்
பால் – கால் டம்ளர்

செய்முறை

ஒரு டம்ளர் நீரில் புதினா இலை, தேயிலைச் சேர்த்துக் கொதிக்கவிட வேண்டும்.

பாதியாகச் சுண்டியதும் வடிகட்டி, தேன் அல்லது பனங்கற்கண்டு சேர்த்துப் பருகவும்.

விருப்பப்பட்டால் பால் சேர்க்கலாம்.

பால் சேர்க்காமல் குடிப்பது தான் நல்லது.

தேன் அல்லது பனங்கற்கண்டுக்கு பதிலாக கருப்பட்டி சேர்த்தும் பருகலாம்.