தமிழ் சினிமாவே தலையில் வைத்து கொண்டாடும் நடிகர்களில் ஒருவர் தான் நடிகர் விஜய். சமீப காலத்தில் வெளியாகும் படங்கள் பெரும்பாலும், பாக்ஸ் ஆபிஸில் சாதனை செய்து வருகிறது.
விஜய்யின் பீஸ்ட் திரைப்படம் கடந்த ஏப்ரல் 13ம் தேதி வெளியாகி வசூல் வேட்டை நடத்தி வருகிறது. சென்னையில் மட்டும் இரண்டு நாள் முடிவில் ரூ. 3.57 கோடி வரை வசூலித்திருப்பதாகவும் தகவல்கள் வெளிவந்த வண்ணம் உள்ளன.
உலகம் முழுவதும் ரூ. 100 கோடிக்கு மேல் வசூலித்து விட்டதாக இணையதளங்களில் செய்திகள் வெளிவருகின்றது. அடுத்தடுத்து ஒவ்வொரு இடத்திலும் எவ்வளவு வசூல் என்ற விவரங்களும் வெளியாகிய வண்ணம் உள்ளது.
இந்த நிலையில் டுவிட்டரில் விஜய்யின் ஒரு வீடியோ வைரலாகி வருகிறது. அது என்னவென்றால் நடிகரும், நடன கலைஞருமான சதீஷ் மற்றும் இரண்டு சின்ன குழந்தைகளுடன் மாஸ்டர் பட வாத்தி கம்மிங் பாடலுக்கு ஆட்டம் போட்டுள்ளார் விஜய்.
அதனை அதனை பார்த்த ரசிகர்கள் எந்த கஷ்டமும் இல்லாமல், சந்தோஷமாக குழந்தைகளுடன் நடமாடும் விஜய்யை பார்த்து அவரது ரசிகர்கள் ட்டுவிட்டரில் வீடியோவை வைரலாக்கி வருகின்றனர்.
Exclusive: Thalapathy OffScreen #VaathiComing step with @dancersatz & Kid #Harshitha ❤️ #Beast @actorvijay pic.twitter.com/4jvv0DJaAM
— Actor Vijay Fans Page (@ActorVijayFP) April 15, 2022