தமிழ் பஞ்சாங்கத்தில் கணிப்பது பெரும்பாலும் பலிக்கும்.
சென்னை மழை வெள்ளம், புயல் போன்றவற்றை பஞ்சாங்கம் கணித்தது பலித்தது.
அதே போல புதிய வகை வைரஸ் உருவாகும் என கொரோனா நோய் பற்றி பஞ்சாங்கம் கணித்திருந்தது பலித்தது.
இந்த ஆண்டு கொரோனா நான்காவது அலை உருவாகும் என மருத்துவ நிபுணர்கள் கணித்துள்ளனர். அதே போல பஞ்சாங்கத்திலும் கொரோனா வைரஸ் பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது.
கொரோனா நோய் தொற்று
கொரோனா தொற்றுநோய் திரும்பவும் வர வாய்ப்புகள் உண்டு.
அதிக மழை பெய்து கடலில் வீணாக கலக்கும்.
அதிக மழை காரணமாக விவசாயம் பாதிப்புக்குள்ளாகும்.
மழை, வெள்ளம் புயலால் அதிக பாதிப்புகளை சந்திக்க நேரிடும்.
சினிமா பிரபலங்களுக்கு ஆபத்து
அரசியல்வாதிகள், சினிமா நடிகர்களுக்கு உடல்நல பாதிப்பு உருவாகி கண்டம் ஏற்படும் என பஞ்சாங்கத்தில் கணிக்கப்பட்டுள்ளது.
மருத்துவமனையில் கர்ப்பிணிகளுக்கு அதிக அளவில் அறுவை சிகிச்சை மூலமே குழந்தைகள் பிறக்கும்.
இந்தியா பாகிஸ்தான் இடையில் பெரும் கலவரம் ஏற்பட்டு, பின்னர் சுமுக முடிவு ஏற்படும். இந்தியா, பாகிஸ்தான், சீனா எல்லை பிரச்சினை பெரும் அளவில் வெடிக்கும்.
தமிழ் பஞ்சாங்கத்தில் கணிப்பு இது வரை 99 சதவீதம் நடைபெற்றுள்ள நிலையில் புது வருட ஆரம்பமே ஆபத்தாக மாறியிருப்பது அனைவரையும் ஒரு வித பதற்ற நிலையில் மாற்றியுள்ளது.