சினிமாவில் சாதிக்க வேண்டும் என்ற கனவோடு திருச்சியில் இருந்து சென்னை வந்தவர் சிவகார்த்திகேயன்.
நடிகரின் பயணம்
விஜய் தொலைக்காட்சியில் கலக்கப்போவது யாரு நிகழ்ச்சி மூலம் மிமிக்ரி திறமையை காட்ட கவனிக்கப்படும் கலைஞராக மாறினார்.
பின் அது இது எது, ஜோடி நம்பர் 1 போன்ற நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி மக்களின் பேவரெட் கலைஞரானார்.
அதன்பின்னர் மெரினா படத்தின் மூலம் நாயகராக அறிமுகமான இவர் தொடர்ந்து ஹிட் படங்களாக கொடுத்து இப்போது முன்னணி நடிகர்களுக்கு இணையாக வளர்ந்து நிற்கிறார்.
படத்திற்கு படம் பல கோடிகளில் இவரது சம்பளமும் உயர்ந்து வருகிறது. டாக்டர் படம் சிவகார்த்திகேயன் நடிப்பில் கடைசியாக வெளியாகி செம ஹிட்டடித்தது, அடுத்து டான் திரைப்படம் வெளியாக இருக்கிறது.
புதிய வீடு
சிவகார்த்திகேயன் திருவீழிமிழலையில் புதிய வீடு ஒன்று கட்டியுள்ளார், இது அவரது சொந்த ஊர். புதிய வீட்டின் பூஜையின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது.