அமைச்சர்களாக எந்தவொரு கூடுதல் சலுகைகளையும் பயன்படுத்த வேண்டாம் என புதிய அமைச்சரவை அமைச்சர்களிடம் ஜனாதிபதி கோரிக்கை விடுத்துள்ளார்.
அதன்படி 17 அமைச்சரவை அமைச்சர்கள் இன்று காலை ஜனாதிபதி முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்துகொண்டனர்.
நேர்மையான, திறமையான மற்றும் தூய்மையான நிர்வாகத்திற்கு அர்ப்பணிப்புடன் செயற்படுமாறு அனைத்து அமைச்சர்களுக்கும் ஜனாதிபதி அழைப்பு விடுத்துள்ளார்.