இன்று அமுலில் இருந்த மின்வெட்டுக் காலத்தைக் குறைக்க பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது.
அனல் மின் நிலையங்களுக்கு எரிபொருளை வழங்குவதற்கு இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் இணக்கம் தெரிவித்ததை அடுத்து இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
இதன்படி 4 மணித்தியாலங்கள் 40 நிமிடங்கள் என முன்னர் திட்டமிடப்பட்டிருந்தது. இந்நிலையில் இன்றைய மின்வெட்டு 03 மணித்தியாலங்கள் 20 நிமிடங்களாக குறைக்கப்படவுள்ளது.