சுபகிருது தமிழ் புத்தாண்டில் எந்த குழந்தைகள் அதிகம் பிறக்கும் தெரியுமா? குரு, சனியால் ஏற்பட்ட மாற்றம்

மங்களகரமான சுபகிருது தமிழ் புதுவருடம் பிறந்துவிட்டது.

மேஷ ராசியில் பகவான் சூரிய பகவான் உச்சம்பெற்று சஞ்சரித்தமையால் பல மங்களகரமான நிகழ்வுகள் நடக்கும்.

லக்னாதிபதி சுக்கிரன் செவ்வாயுடன் சேர்ந்து பத்தாம் இடம் இருந்து சந்திரன் பார்வை பெறுவதால் இந்த ஆண்டு அனைத்து துறைகளிலும் தொழில் விருத்தியாகும்.

அலங்காரப் பொருட்கள் ஆடம்பரப் பொருட்கள் விற்பனை அதிகரிப்பு வேலை வாய்ப்புகள் அதிகரிக்கும்.

இரண்டாம் இடத்திற்கு உரிய புதன் 12ஆம் இடம் சூரியன் ராகுவுடன் சேர்ந்து கேது பார்வை பெறுவதால் இந்த ஆண்டு தனிக்குடித்தனங்கள் அதிகரிக்கும் மக்கள் ஆடம்பர செலவுகளை அதிகமாக செய்வார்கள்.

குரு சனி பார்வை
குரு சனி பார்வை பெற்று மூன்றாம் இடத்துக்குரிய சந்திரன் நான்காமிடம் அமர்ந்து சந்திரனை செவ்வாய் சுக்கிரன் கிரகங்கள் பார்ப்பதால் மக்கள் நோய் நொடிகள் இன்றி தைரியமாக வெளியே சுற்றுவார்கள்.

4-ஆம் இடம் வளர்பிறை சந்திரன் அமர்ந்து செவ்வாய் சுக்கிரன் கேது பார்வை பெறுவதால் இந்த ஆண்டு காதல் திருமணங்கள் அதிகரிக்கும் அதிக வீடு கட்டுவார்கள் ஜவுளி தொழில் சிறப்படையும்.

பண மதிப்பு உயரும்
8ஆம் இடத்திற்குடைய குரு பதினொன்றாம் இடத்தில் ஆட்சிபெற்று சனி பார்வை பெறுவதால் இந்த ஆண்டு நோயினால் உண்டாகும் மரணங்கள் குறையும் மழை அதிகரிக்கும் தண்ணீரில் பயிர்கள் நாசம் ஆகும். ஒன்பதாம் இடத்தில் சனி பகவான் ஆட்சி பெற்று இருப்பதால் டாலருக்கு நிகரான பணத்தின் மதிப்பு உயரும் தொழில் துறையில் நல்ல வளர்ச்சி உண்டு.

பெண்குழந்தை பிறப்பு அதிகரிக்கும்
ஐந்தாமிடம் குரு பார்வை பெற்று ஐந்தாம் இடத்துக்குரிய புதன் பகவான் ராகுவுடன் சேர்ந்து பன்னிரண்டாம் இடத்தில் இருப்பதால் இந்த ஆண்டு பெண் குழந்தைகள் அதிகமாக இருக்கும் செயற்கை கருத்தரித்தல் மூலம் அதிக குழந்தைகள் பிறக்கும்.

மூன்று புயல்கள் உருவாகும்
12ஆம் இடம் சூரியன் புதன் ராகு இருந்து கேது பார்வை பெறுவதால் மூன்று புயல்கள் உருவாகும் பயிர் சேதம் அதிகமாகும்.