லிட்ரோ நிறுவனம் வெளியிட்டுள்ள விசேட அறிவிப்பு!

வீட்டு சமையல் எரிவாயு கொள்கலன்கள் இன்று சந்தைக்கு விநியோகிக்கப்பட மாட்டாது என லிட்ரோ எரிவாயு நிறுவனம் அறிவித்துள்ளது.

என்ற போதும் வணிக நோக்கங்களுக்கான எரிவாயு கொள்கலன்கள் அதாவது 37.5 கிலோகிராம் நிறையுடைய கொள்கலன்கள் மாத்திரமே இன்று விநியோகிக்கப்படும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

அத்துடன் எரிவாயுடன் கூடிய கப்பலொன்று இன்றைய தினம் நாட்டை வந்தடையும்.

எனவே நாளை முதல் சந்தைக்கு வீட்டு சமையல் எரிவாயு விநியோகம் ஆரம்பிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், புத்தாண்டை முன்னிட்டு கடந்த 5 நாட்களாக மூடப்பட்டிருந்த முத்துராஜவெல லிட்ரோ எரிவாயு முனையம் இன்று மீண்டும் திறக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.