தனுஷின் புதிய பட ஷூட்டிங்கில் இருந்து லீக்கான வீடியோ !

பிஸியாக நடித்து வரும் தனுஷ்

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒரு நடிகர் தனுஷ் இவர் நடிப்பில் கடைசியாக மாறன் திரைப்படம் நேரடியாக OTT-யில் வெளியானது.

ஆனால் அப்படமும் மோசமான விமர்சனங்களை பெற்று வெளியானதே தெரியாத அளவு ஆகிவிட்டது.

அப்படத்தை தனுஷ் திருச்சிற்றம்பலம், வாத்தி உள்ளிட்ட படங்களில் பிஸியாக நடித்து வருகிறார், அப்படத்தின் ஷூட்டிங்கும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

லீக்கான வீடியோ

இந்நிலையில் தற்போது திருவிழா போன்ற ஒரு செட்டப்பில் தனுஷ் மற்றும் நித்யா மேனன் நடனமாடும் வீடியோ ஒன்று இணையத்தில் லீக்காகி வைரலாகி வருகிறது.

பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இப்படத்தில் தனுஷுடன் பாரதிராஜா பிரகாஷ் ராஜ் உள்ளிட்டோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

வரிசையாக சன் பிக்சர்ஸ் திரைப்படங்கள் வரவேற்பபை பெற தவறி வரும், தனுஷின் திருச்சிற்றம்பலம் திரைப்படமாவது வெற்றியடைகிறதா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.