தமிழ் சினிமாவில் துணிச்சலான பல கதாபாத்திரங்களை ஏற்று நடித்து வருபவர் நடிகை ஆண்ட்ரியா.
வடசென்னை, ஆயிரத்தில் ஒருவன், தரமணி, விஸ்வரூபம் 1,2, மாஸ்டர் என சிறந்த கதைக்களம் கொண்ட படங்களை மட்டுமே தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார்.
மேலும் தற்போது மிஷ்கின் இயக்கத்தில் உருவாகியுள்ள பிசாசு 2 படத்தில் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
இந்நிலையில் சமீபத்தில் அளித்த பேட்டியில் வெற்றிமாறன் தனக்கு கூறிய படத்தில், ஏன் முதலில் நடிக்கவில்லை என்பது குறித்து பேசியுள்ளார்.
நடிக்க மாட்டேன்
இதில் ” இயக்குனர் வெற்றிமாறன் பொல்லாதவன் படத்துக்கு முன்னாள் தன்னை சந்தித்து வேறு ஒரு கதை சொல்லியிருந்தார். அதில் என்னை கதாநாயகியாக நடிக்க என்னை அனுகினார். ஆனால் அப்போது எனக்கு நடிக்க ஆசை இல்லை எனவே அந்த படத்தில் நடிக்கவில்லை ” என தெரிவித்துள்ளார்.