இலங்கையில் இருந்து மேலும் மூவர் தமிழகத்திற்கு தப்பி ஓட்டம்!

இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக தமிழகத்திற்கு தஞ்சம்கோரி செல்பவர்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

அந்தவகையில் மட்டக்களப்பைச் சேர்ந்த ஒரு பெண், சிறுமி, நான்கு வயது சிறுவன் என ஒரு குடும்பத்தை சேர்ந்த 3 பேர் தனுஷ்கோடிக்கு அகதிகளாக இன்று அதிகாலை சென்றடைந்துள்ளனர்.

தனுஷ்கோடியை சென்றடைந்த தாய் மற்றும் பிள்ளைகளை மீட்ட மெரைன் பொலிஸார் தனுஷ்கோடி மெரைன் பொலிஸ் நிலையத்திற்கு அவர்களை அழைத்து வந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் அவர்கள் மட்டக்களப்பில் இருந்து எவ்வாறு தனுஷ்கோடிக்கு சென்றார்கள் என்பது குறித்து பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

அதேவேளை கடந்த நாடிகளிலும் யாழ்ப்பாணம், வவுனியா, மன்னார் பகுதியை சேர்ந்தவர்கள் இவ்வாறு தமிழகத்திற்கு ப்டகுமூலம் சென்று தஞ்சம் அடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.