உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு யாழ் பல்கலையில் அஞ்சலி!

கடந்த 2019 ஆம் ஆண்டு உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு மூன்றாவது ஆண்டு நினைவேந்தல், யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்களால் இன்று அனுஸ்டிக்கப்பட்டது.

இந்நிகழ்வு நண்பகல் 12 மணியளவில் பல்கலைக்கழக பிரதான வாயிலில் அமைந்துள்ள தூபியில் இடம்பெற்றது.

இதன்போது பல்கலைக்கழக மாணவர்களால் உயிர்த்தஞாயிறு தாக்குதலை வெளிப்படுத்தும் நினைவுருவப்படத்திற்கு மலரஞ்சலி செலுத்தப்பட்டது.

அதனைத்தொடர்ந்து உயிரிழந்தவர்களுக்கு ஈகைச்சுடரும் ஏற்றப்பட்டு ஒரு நிமிட அகவணக்கமும் இடம்பெற்றது.