யாழ். வடமராட்சி மந்திகை மற்றும் கிராமக்கோடு, ஓராங்கட்டை கூட்டுறவு எரிபொருள் நிரப்பு நிலையத்திலும் எரிபொருள் பெற்றுக் கொள்வதற்கு மக்கள் தமது பெட்றோல் வாகனங்களுடன் இன்றும் மிக நீண்ட வரிசையில் காத்திருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஓராங்கட்டை கூட்டுறவு எரிபொருள் நிரப்பு நிலையத்தில் நேற்றைய தினம் திடீரென எரிபொருள் நிரப்பு இயந்திரம் செயலிழந்தமையால் பிற்பகல் 6:30 மணிமுதல் எரிபொருள் நிரப்புவது நிறுத்தப்பட்டது.
இந்நிலையில், இன்று காலை முதல் மீண்டும் எரிபொருள் விநியோகிக்கப்படுகிறது.
அத்துடன் மந்திகை எரிபொருள் நிரப்பு நிலையத்தில் இரவு 8.00 மணி முதல் இதுவரை எரிபொருள் விநியோகம் இடம்பெறுவதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்துள்ளார்.
எரிபொருள் பெற்றுக் கொள்வதற்காக பெருந்திரளான மக்கள் மிக நீண்ட வரிசையில் காத்திருக்கின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.