றம்புக்கணை சம்பவம் தொடர்பில் வெளிவரும் உண்மைகள்

றம்புக்கணையில் போராட்டத்தின் போது பொலிஸாரின் துப்பாக்கிப் பிரயோகத்திற்கு இலக்காகி உயிரிழந்த சம்பவம் தொடர்பில் மற்றுமொரு புதிய தகவல் வெளியாகியுள்ளது.

சம்பவத்தின் போது பொலிஸார் நான்கு T-56 துப்பாக்கிகள் மற்றும் 35 தோட்டாக்களை பாவித்துள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.

நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள ஆவணத்தின் மூலம் இந்த விடயம் வெளிவந்துள்ளது.

றம்புக்கணை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களை கலைக்க பொலிஸார் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் உயிரிழந்திருந்ததுடன், பலர் படுகாயமடைந்திருந்தனர்.

இதேவேளை, குறித்த சம்பவம் தொடர்பில் வாக்குமூலம் ஒன்றை பெற்றுக்கொள்ள பொலிஸ்மா அதிபர் உள்ளிட்ட முக்கிய அதிகாரிகள் மனித உரிமைகள் ஆணைக்குழுவுக்கு அழைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.