கோடையில் குளிர்ச்சியான உணவுகளை தேர்ந்தெடுப்பது குழந்தையை புத்துணர்ச்சியாக வைத்திருக்க உதவும். மேலும் குழந்தைகளின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.
ஆயுர்வேத மருத்துவத்தின்படி சில உணவுக்கு வெப்பம் அல்லது குளிர்ச்சி தன்மை உ ள்ளது. மேலும் கோடையில் குளிர்ச்சியான உணவுகளை தேர்ந்தெடுப்பது குழந்தையை புத்துணர்ச்சியாக வைத்திருக்க உதவும். இந்த உணவுகள் வெப்பநிலையை சீராக்கி நீரிழப்பு உண்டாகாமல் தடுக்கிறது. அப்படியான உணவு பட்டியலை இப்போது பார்க்கலாம்.
தர்பூசணி
பெரியவர்களை போன்றே சிறியவர்களுக்கும் இது சிறந்த உணவு. 92% நீர்ச்சத்து கொண்டவை. இதில் வைட்டமின் எ, பி காம்ப்ளக்ஸ், ஆண்டி ஆக்ஸிடண்ட் நிறைந்துள்ளன. இது நச்சுகள் மற்றும் லைகோபீன் அகற்ற உதவுகின்றன.
வெள்ளரிக்காய்
இதுவும் 90% நீர்ச்சத்து கொண்டவை. இது டையூரிடிக் என்பதால் வெள்ளரிகள் உடலில் இருந்து ந்ச்சுக்களை வெளியேற்றுகிறது. இதில் வைடமின் பி,ஃப்ளவனாய்டுகள், எலக்ட்ரோலைட்டுகள் மற்றும் ஏராளமான நார்ச்சத்து உள்ளது. செரிமான அமைப்பு சீராக இயங்க உதவுகிறது. மலச்சிக்கலை தடுக்க செய்கிறது. குழந்தைக்கு வெள்ளரிக்காய் ஆறு மாதங்களுக்கு பி றகு கொடுக்கலாம். சில குழந்தைக்கு வாயுத்தொல்லை உண்டாகலாம் என்றால் 8 மாதத்துக்கு பிறகு வெள்ளரிகளை எடுக்கலாம்.
இளநீர்
குளிர்பானங்கள் மற்றும் பழச்சாறுகள், கோடைகாலத்துக்கு ஏற்ற பானம் என்று வரும் போது இளநீர் முக்கியமானது. இது எலக்ட்ரோலைட்டுகளால் நிரம்பியுள்ளது.நீரிழப்பை தடுக்கும். கோடையில் உடலுக்கு ஊட்டமளிக்கிறது.இதில் பொட்டாசியம் நிறைந்துள்ளது, இது வெப்பநிலை ஒழுங்குமுறையை ஊக்குவிக்கிறது. இளநீர் உடலுக்கு குளிர்ச்சியை தருவதோடு, செரிமான மண்டலத்தையும் சீராக இயங்க வைக்கிறது. ஆறு மாதங்களுக்கும் மேலான குழந்தைகளுக்கு இளநீர் எளிதில் ஜீரணமாகும். இதில் லாரிக் அமிலம் தாய்ப்பாலை போன்றது.
ஆரஞ்சு
பால் தவிர மற்ற கால்சியம் ஆதாரங்கள் சூடான நாட்களை குளிர்ச்சியாக்க சிறந்த வழி. இது 80% தண்ணிர் கொண்டவை. செரிமானத்தை ஊக்குவிக்கிறது. வெப்பத்தை குறைக்கிறது.பொட்டாசியம் நிறைந்த இது உடல் இழக்கும் ஊட்டச்சத்தை திரும்ப அளிக்கிறது. மேலும் இதில் வைட்டமின் ஏ, சி, கால்சியம் நார்ச்சத்து மற்றும் 100க்கும் மேற்பட்ட பைடோநியூட்ரியண்ட்கள் உள்ளன.
6 மாதங்களுக்கு மேலான குழந்தைக்கு ஆரஞ்சு எதிராக அறிவுறுத்தவில்லை என்றாலும் மருத்துவர்கள் 10 மாதங்கள் வரை காத்திருக்க பரிந்துரைக்கின்றனர். சிட்ரஸ் பழம் அதிக சிட்ரிக் அமிலம் என்பதால் வயிற்று உபாதையை உண்டாக்க வாய்ப்புண்டு. நாள் ஒன்றுக்கு 3 – 4அவுன்ஸ் வரை கொடுக்கலாம்.
தக்காளி
இது 95% நீர்ச்சத்துகொண்டது. நோய் எதிர்ப்பு சக்தி நிறைந்தது. வைட்டமின் சி, வைட்டமின் ஏ கொண்டது., இதில் உள்ள லைகோபீன் அதிக செறிவு கொண்டது. இது தொல் நோய்களிலிருந்து பாதுகாக்கும் ஆக்ஸிஜனேற்றியாகும்.
10 மாதங்களுக்கு பிறகு குழந்தைக்கு தக்காளி கொடுக்கலாம். அதற்கு முன்பு இது வயிற்று வலியை உண்டாக்கலாம். இதை சமைத்தோ அல்லது மற உணவுகளில் கலந்தோ பயன்படுத்தலாம்.