நாளைய தினம் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக ஆசிரியர் சங்கங்கள் அறிவித்துள்ளது.
எரிபொருள் இன்மையால் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் பாடசாலைக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளதால் குறித்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்தார்.
இதேவேளை, மக்களின் கருத்துக்கு அரசாங்கம் மதிப்பளிக்க வேண்டும் எனவும் இதன் காரணமாக நாளைய தினம் சுகயீன விடுமுறை போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.