அரசாங்கத்திற்கு எதிராக அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் ஏற்பாட்டில் முன்னெடுக்கப்பட்டுள்ள ஆர்ப்பாட்ட பேரணி கொழும்பு கோட்டையிலிருந்து ஆரம்பமாகி காலிமுகத்திடல் நோக்கி சென்றுகொண்டிருக்கின்றது.
இந்த நிலையில் காலிமுகத்திடலுக்கு செல்லும் வீதிகள் அனைத்தும் கடுமையான வீதித்தடைகள் போடப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டள்ளது.
மேலும், குறித்த வீதிகளை மறித்து வீதித்தடைகள் போடப்பட்டுள்ளமையால் அவ் வீதியுடனான போக்குவரத்து முற்றாக துண்டிக்கப்பட்டுள்ளதுடன் வீதிவழியே நடந்து செல்லவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
வீதி தடைசெய்யப்பட்ட பகுதிக்கு நாடாளுமன்ற உறுப்பினர்களான மனோ கணேசன் (Mano Ganesan) மற்றும் முஜிபுர் ரஹ்மானும் நேரடியாக விஜயம் செய்து நிலைமைகளை ஆராய்ந்து வருகின்றனர்.