அதிகமான முதலீடுகள், பணப்புழக்க அபாயங்கள், ஒழுங்குமுறை மூலதன நிலைமைகள் மீதான அழுத்தம் மற்றும் மோசமான நிதி நிலை செயற்பாடுகள் ஆகியன இலங்கை காப்புறுதியாளர்களின் கடன் கோப்புகளில் குறுகிய கால அபாயத்தை அதிகரித்துள்ளதாக நிதிச் சந்தைக்கான கடன் மதிப்பீடுகள் மற்றும் ஆய்வு நிறுவனமான Fitch Ratings எச்சரித்துள்ளது.
Fitch Ratings கடந்த வாரம் அனைத்து இலங்கை காப்புறுதியாளர்களையும் தேசிய அளவில் எதிர்மறை பார்வை (Watch Negative ) மதிப்பீட்டில் தரவரிசைப்படுத்தியதை அடுத்து இந்த மதிப்பீடு வெளியிடப்பட்டுள்ளது.
இந்த மதிப்பீடு கடனைத் திருப்பிச் செலுத்தும் திறனைக் குறிப்பதுடன் அதேவேளை எதிர்மறை பார்வை மதிப்பீடு கடனை திருப்பிச் செலுத்தும் திறன் மோசமடைந்து வருவதை காட்டுகிறது.
இலங்கையின் சர்வதேச இறையாண்மை கடன் மதிப்பீடு உட்பட பல்வேறு நிதி நிறுவனங்களின் அண்மைய எதிர்மறை பார்வை மதிப்பீடுகள், உள்நாட்டு வங்கிகள் மற்றும் வங்கி அல்லாத நிதி நிறுவனங்களால் வழங்கப்பட்ட அரசாங்கப் பத்திரங்கள் மற்றும் வைப்புத் தொகைகள் மற்றும் பத்திரங்கள் ஆகியவற்றில் தமது முதலீடுகளை மேலாதிக்கம் செய்யும் உள்நாட்டு முதலீட்டாளர்களுக்கு இருக்கும் ஆபத்தை அம்பலப்படுத்தியுள்ளதாக கூறப்படுகிறது.
Fitch Ratings இலங்கையின் சர்வதேச இறையாண்மைக் கடன் மதிப்பீட்டு தரப்படுத்தலை ‘CC’ இல் இருந்து ‘C’ ஆகக் குறைத்துள்ளது.
அதேவேளை பல நிதி நிறுவனங்களின் மதிப்பீடுகள் எதிர்மறை பார்வையாக குறைவாக கீழ் நோக்கி தரப்படுத்தப்பட்டுள்ளன.
Watch Negative என்பது ஒரு நிறுவனத்தின் மதிப்பீடு அதன் கடனைத் திருப்பிச் செலுத்தும் திறனைக் குறிப்பதுடன் அதன் திருப்பிச் செலுத்தும் திறன் மோசமடைந்திருப்பதை சுட்டிக்காட்டுகிறது.