வேபொட – வடக்கு பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் நேற்று முன்தினம் இரவு கணவன் ஒருவர் தனது மனைவியைக் கத்தியால் குத்திக் கொலை செய்துள்ளார்.
உயிரிழந்த பெண்ணின் கணவர் மேற்கொண்ட கத்திக்குத்து தாக்குதலில் மனைவியின் சகோதரி மற்றும் நண்பியும் காயமடைந்து கம்பஹா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இதேவேளை, இந்த சம்பவத்தின் பின்னர் சந்தேக நபரான கணவர் வீட்டிற்கு அருகில் உள்ள கிணற்றில் குதித்து தற்கொலை செய்துக் கொள்ள முயற்சித்த நிலையில் அயலவர்கள் அவரை காப்பாற்றியுள்ளனர்.
இந்த சம்பவத்தில் வேபொட – வடக்கு பிரதேசத்தை சேர்ந்த அப்ஸரா கல்பனி என்ற 33 வயதுடைய பெண் ஒருவரே இவ்வாறு உயிரிந்துள்ளார்.
கணவர் மாத்தறை, கெகனதுர பிரதேசத்தை சேர்ந்த 37 வயதுடைய நபர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர். சம்பவத்துடன் தொடர்புடைய கணவன் மற்றும் மனைவி பட்டாரிகளாகும்.
அவர்கள் நியூஸிலாந்திற்கு செல்ல தயாராகியிருந்த போது கணவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இதனால் மனைவி மாத்திரம் நியூஸிலாந்து நாட்டிற்கு சென்றுள்ளார்.
இந்த நிலையில் இருவருக்கும் இடையில் தொடர்ந்து வாய்த்தகராறு ஏற்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. இதன் காரணமாக இருவரும் விவாகரத்து செய்வதற்கு திட்டமிட்டுள்ளனர்.
இவ்வாறான சூழலில் மனைவி நியூஸிலாந்தில் இருந்து நாடு திரும்பியதை அறித்து கொண்ட கணவர் இரகசியமாக நேற்று முன்தினம் இரவு வீட்டிற்குள் நுழைந்து கொலை செய்துள்ளார். சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.