உடலில் உள்ள கேட்ட கொழுப்பை விரட்டும் பானம்

முட்டைக்கோஸ் உடலில் உள்ள கெட்ட கொழுப்புகளை விரட்டியடிக்க உதவி செய்யும் அற்புதமான உணவு.

வைட்டமின் ஏ,பி1,பி2, பி6,இ,சி,கே, கால்சியம், ஐயோடின், பொட்டாசியம், சல்பர், பாஸ்பரஸ், இரும்புச்சத்து போன்ற சத்துக்கள் முட்டைக்கோஸில் இருக்கிறது.

உடலுக்கு தேவையான ஊட்டச்சத்துக்கள் அதிகம் நிறைந்திருக்கும் முட்டைக்கோஸ், உடலுக்கு மிகவும் ஆரோக்கியம் தரக்கூடியது.

முட்டைக்கோஸ் பயன்படுத்தி பொறியல், குழம்பு போன்ற உணவு வகைகளை சமைக்கலாம். ஆனால் இவற்றை காட்டிலும் பச்சையாக பானம் செய்து குடிப்பதால் அதிக நன்மைகள் கிடைக்கும்.

இன்று கெட்ட கொழுப்பை விரட்டியடிக்கும் முட்டைக்கோஸ் பானம் எப்படி செய்வது என்று பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்
முட்டைக்கோஸ் – 50 கிராம்
மிளகு – 10
தண்ணீர் – 1 கப்
உப்பு – தேவைக்கு
இஞ்சி – சிறிய துண்டு
எலுமிச்சை சாறு – 1 டீஸ்பூன்
செய்முறை
முட்டைக்கோஸை பொடியாக வெட்டிக்கொள்ளவும்.

மிக்சியில் நறுக்கிய முட்டைக்கோஸை போட்டு அதனுடன் இஞ்சி, மிளகு போட்டு நன்றாக அரைத்துக் கொள்ள வேண்டும். கொஞ்சமாக தண்ணீர் விட்டு அரைத்துக் கொள்ளுங்கள்.

நன்றாக அரைந்ததும் இந்த ஜூஸை ஒரு வடிகட்டியின் மூலம் வடிகட்டி சாரை பிழிந்து எடுத்துக் கொள்ள வேண்டும்.

ஒரு டம்ளர் அளவு தண்ணீருடன், இந்த முட்டைகோசு சாரை சேர்த்து, எலுமிச்சை சாறு, ஒரு சிட்டிகை அளவு உப்பை போட்டு, குடித்துவிட வேண்டும்.

சூப்பரான சத்தான முட்டைக்கோஸ் ஜூஸ் ரெடி.