டீ பிரியர்கள் நிறைய பேருக்கு டீயை ரசித்துக் குடிப்பது மிகவும் பிடிக்கும்.
சிலர் டீ குடிக்கும் போது நிறைய பேர் சில உணவுகளை சாப்பிடுகின்றனர். அப்படி சாப்பிடும் போது ஆரோக்கியமற்ற உணவு சேர்க்கை ஏற்படுகின்றது.
அது உடலுக்கு மோசமான விளைவுகளை ஏற்படுத்துகின்றது.
இன்று நாம் டீ குடிக்கும் போது என்ன மாதிரியான சில உணவுகளை சேர்த்து எடுத்துக் கொள்ளக் கூடாது என்பது பற்றி பார்க்கலாம்.
பச்சை காய்கறிகள் – பச்சைக் காய்கறிகளில் இரும்புச் சத்துக்கள்6, வைட்டமின்கள் போன்ற ஊட்டச்சத்துக்கள் அதிக அளவில் உள்ளன. இதனை சூடான தேநீருடன் சேர்த்து சாப்பிடவே கூடாது. தேநீரில் டானின்கள் மற்றும் ஆக்சிலேட்டுகள் உள்ளது. உடல் இரும்புச் சத்தை உறிஞ்சுவதைத் தடுத்து விடும்.
கடலை மாவு – பலருக்கு பக்கோடா, பஜ்ஜி, வடை என்று கொரித்துக் கொண்டே டீ குடிக்க மிகவும் பிடிக்கும். அதனால் டீயுடன் கடலை மாவில் செய்யப்பட்ட பலகாரங்களைச் சாப்பிடுவார்கள்.
ஆனால் அது உடல் ஆரோக்கியத்துக்கு மிக மோசமான பக்க விளைவுகளை ஏற்படுத்தும். பொதுவாகவே பொரித்த உணவுகளைச் சாப்பிடுவது உடலுக்குக் கேடு தான். அதிலும் கட்டாயம் டீயுடன் சேர்த்து அந்த உணவுகளை எடுத்துக் கொள்வதை முற்றிலும் தவிர்க்க வேண்டும்.
இந்த காமினேஷன் செரிமான மண்டலத்தில் பிரச்சினையை உண்டாக்குவதோடு மலச்சிக்கல் பிரச்சினையையும் ஏற்படுத்தும்.