மகிந்தவிற்கு அதிர்ச்சியை கொடுத்த கோட்டபாய

நாடாளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அனைத்துக் கட்சிகளின் பங்கேற்புடன், அனைத்துக் கட்சி அரசாங்கத்தை உருவாக்குவதற்கான இணக்கத்தை, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரியப்படுத்தியுள்ளார்.

அனைத்துக் கட்சிகளின் தலைவர்களுக்கும் கடிதம் மூலம் ஜனாதிபதி இதனை தெரியப்படுத்தியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

அதற்கமைய தற்போதைய பிரதமரும், அமைச்சரவையும் பதவி விலகியதன் பின்னர் அனைத்துக் கட்சி அரசாங்கத்தை அமைக்க ஜனாதிபதி இணக்கம் வெளியிட்டுள்ளார்.

இதன் முதல் கட்டமாக எதிர்வரும் 29ஆம் திகதி விசேட கூட்டத்திற்கும் ஜனாதிபதி அழைப்பு விடுத்துள்ளார்.

மேலும் புதிய அரசாங்கத்தின் கட்டமைப்பு குறித்து இதன்போது கலந்துரையாடப்படவுள்ளதாகவும் கூறப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.