கடந்த 2009 ஆம் ஆண்டு ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில் 1500 கோடி ரூபாய் பட்ஜெட்டில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற அவதார் பட இரண்டாம் பாகத்தின் புகைப்படங்கள் வெளியாகிவுள்ளது.
பல வருட சஸ்பென்சுக்குப் பிறகு, ஜேம்ஸ் கேமரூனின் அவதார்-2ம் பாகத்தின் முதல் புகைப்படங்களை டிஸ்னி நேற்று வெளியிட்டது. அவதார்: தி வே ஆஃப் வாட்டர் என்ற பெயரில் புதிய புகைபடங்கள் வெளியாகி உள்ளது. இந்த படத்தின் டீசர் அல்லது டிரைலர் மே 6-ல் திரையரங்கில் ஒளிபரப்பப்படும் என கூறப்படுகிறது. இது குறித்தான அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அவதார்: தி வே ஆஃப் வாட்டர் படத்தைல் 20வது செஞ்சுரி ஸ்டுடியோஸ் டிசம்பர் 16 முதல் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது. உலகம் முழுவதும் சூப்பர்ஹிட்டான ‘அவதார்’ திரைப்படத்தின் இரண்டாம் பாகம் 160 மொழிகளில் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது. இதுகுறித்து ஜேம்ஸ் கேமரூன் நியூசிலாந்தில் இருந்து வீடியோ மூலம் உரையாற்றினார். சினிமா என்னவெல்லாம் செய்ய முடியும் என்பதற்கான வரம்புகளைத் தாண்டும். படத்தின் இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன.
முதல் படத்தைவிட இதில் மாபெரும் தொழில்நுட்ப முன்னேற்றங்களை காணலாம். அதன் முக்கிய கதாபாத்திரங்களான ஜேக் சுல்லி (சாம் வொர்திங்டன்) மற்றும் நெய்திரி (ஸோ சல்டானா) ஆகியோர் இப்போது ஒரே குடும்பமாக உள்ளனர். அவதார் எல்லா காலத்திலும் அதிக வருவாய் ஈட்டிய படம் ஆகும்.
சினிமாகாn திரையரங்கு தொழில்துறை உச்சிமாநாட்டில் கலந்துகொண்டவர்கள் 3D கண்ணாடிகளை அணிந்து கொண்டு அவதார்: தி வே ஆஃப் வாட்டர் டிரைலரை பார்த்தனர். அதில் கதாபாத்திரங்கள் கிரகத்தின் கடல்களுக்கு அடியில் நீந்துவதையும் வானத்தில் பறக்கும் காகாட்சிகளும் இடம்பெற்று இருந்தன.
சினிமாகானில் படத்தைப் பற்றி பேசிய தயாரிப்பாளர் ஜான் லாண்டவ் கூறும் போது, கேமரூனின் ஸ்கிரிப்ட்களின் பலம் என்னவென்றால், அவை எப்போதும் உலகளாவில் தொடர்பு படுத்தக்கூடிய கருப்பொருள்கள் இருக்கும் என்று கூறினார். ஹாலிவுட்டில் 3டி அலையை ஏற்படுத்தப்போகும் முதல் அவதார் செப்டம்பர் மாதம் திரையரங்குகளில் மீண்டும் வெளியிடப்படுகிறது.
கடந்த 2009ஆம் ஆண்டு ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில் 1500 கோடி ரூபாய் பட்ஜெட்டில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்றப் படம் அவதார். இப்படத்திற்கு 3 ஆஸ்கார் விருதுகள் கிடைத்தன. அவதார்-2, 2021 ஆம் ஆண்டு வெளியாகயிருந்த சூழலில் கொரோனாவால் இப்படம் 2022 ஆம் ஆண்டு வெளியாகும் என்று ஒத்திவைக்கப்பட்டது.