ஒன்லைன் விற்பனை தளத்தை நம்பி பொருள் வாங்க சென்ற ஆசிரியருக்கு நேர்ந்த கதி!

யாழ் சண்டிலிப்பாயை சேர்ந்த ஆசிரியர் ஒருவர், சிங்கள பிரதேசத்திற்கு சென்றிருந்த நிலையில் பணத்தையும் நகைகளையும் இழந்த சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.

பிரபல இணைய விற்பனைத்தளத்தில் விளம்பரப்படுத்தப்பட்டிருந்த ஜெனெரேட்டர் இயந்திரத்தை வாங்குவதற்காக சென்றபோதே இந்த ட்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இதன்போது , போலி விற்பனை முகவரும் அவரின் சகாக்களும் இணைந்து, ஆசிரியரை கடுமையாக தாக்கிய பின், அவரிடமிருந்த பணத்தையும் நகைகளையும் அபகரித்த சம்பவம் அறிய வருகின்றது.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், இலங்கையின் பிரபல ஒன்லைன் விற்பனை தளம் மூலம்,ஜெனெரேட்டர் ஒன்றினை வாங்கவதற்காக விற்பனையாளரிடம் தொலைபேசி மூலம் தொடர்பு மேற்கொண்டுள்ளார். இதனபோது விற்பனையாளர் பாதி பணத்தை முற்பணமாக வங்கி கணக்கில் வைப்பிலிடுமாறு கேட்டுள்ளார்.

இதனையடுத்து , யாழ் ஆசிரியர் அதற்கு மறுப்பு தெரிவித்து, நேரில் தான் பணத்துடன் வருவதாக கூறி, புறப்பட்டு அவர்கள் கூறிய இடத்திற்கு சென்றுள்ளார். யாழ் ஆசிரியரை , குறிப்பிட்ட இடத்திற்கு வருமாறு அழைத்து, போலி விற்பனை முகவரும் அவரின் சகாக்களும் இணைந்து, கடுமையாக தாக்கியத்துடன் பணத்தையும், அவர் அணிந்திருந்த நகைகளையும்அபகரித்து சென்றுள்ளனர்.

இதனையடுத்து சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை போலீசார் முன்னெடுத்து வருகின்றனர். அதேவேளை இவ்வாறான இணையத்தள மூலம் பொருட்களை கொள்வனவு செய்யும் போது மிகுந்த கவனத்துடன் செயற்படுமாறும் போலீசார் மக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர்.