இந்த பாட்டில் விற்கப்பட்டவுடன் இதன் 25 சதவீத தொகை மேரி கியூரி தொண்டு நிறுவனத்திற்கு வழங்கப்படும் என தெரிவித்துள்ளது.
உலகின் மிகப்பெரிய விஸ்கி பாட்டில் இந்த மாதம் 25-ஆம் தேதி ஏலத்திற்கு வருகிறது. மெக்கலன் நிறுவனத்தின் ஸ்காட்ச் விஸ்கி ரகத்தை சேர்ந்த இந்த பாட்டில் 5 அடி, 11 இன்ச் அளவையும், 311 லிட்டர் கொள்ளவை கொண்டுள்ளது. இந்த விஸ்கிக்கு ‘தி இண்ட்ரிபிட்’ என பெயரிடப்பட்டுள்ளது. எய்டன்பெர்க்கில் உள்ள ல்யான் அண்ட் டார்பிள் என்ற ஏல விடுதியில் இந்த பாட்டில் ஏலத்திற்கு வருகிறது. இது சாதாரண 444 சாதாரண விஸ்கி பாட்டில்களுக்கு ஒப்பான மதுவை கொண்டுள்ளது.
இதுகுறித்து வேல்ஸ் ஆன்லைன் என்ற இணையதளம் கூறுகையில், இந்த பாட்டிலின் விலை இந்திய மதிப்பில் 14 கோடி விலையை கொண்டது. அதிக விலைக்கு விற்கப்படும் விஸ்கி என்ற உலக சாதனையை இந்த பாட்டில் படைத்துள்ளது. கடந்த வருடம் கின்னஸ் உலக சாதனை பட்டியலிலும் இந்த பாட்டில் இடம்பிடித்தது. இந்த பாட்டில் விற்கப்பட்டவுடன் இதன் 25 சதவீத தொகை மேரி கியூரி மருத்துவ தொண்டு நிறுவனத்திற்கு வழங்கப்படும் என தெரிவித்துள்ளது.