நாட்டில் ஏற்ப்பட்டுள்ள நெருக்கடியினால் நாடாளுமன்றில் பல சேவைகள் கட்டுப்பாட்டுக்குள்

நிலவும் பொருளாதார நிலைமைகளை கருத்தில் கொண்டு நாடாளுமன்றத்தின் தொலைபேசி பாவனை உள்ளிட்ட பல சேவைகளுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

இதற்கமைய, நாடாளுமன்ற தொலைபேசிகளில் பிரத்தியேக தொலைபேசி அழைப்புக்களை மேற்கொள்ள வேண்டாம் என சகல பிரிவு பிரதானிகள் ஊடாக அனைத்து சேவையாளர்களுக்கும் நாடாளுமன்ற செயலாளர் தம்மிக தசநாயக அறிவுறுத்தல் விடுத்துள்ளார்.

அத்துடன் நாடாளுமன்றில் மின்சாரம், நீர் பயன்பாடு மட்டுப்படுத்தப்பட்டுள்ளது.

அதேநேரம், நாடாளுமன்றில் நாளாந்த உணவில் சேர்த்து கொள்ளப்படும் உணவு வகைககளின் எண்ணிக்கை மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற படைக்கள சேவிதர் நரேந்திர பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

இதுதவிர, நாடாளுமன்றில் உணவுப் பொதிக்காக அறவிடப்படும் கட்டணங்களை அதிகரிக்கக்கூடிய நிலை ஏற்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.