கார் கொள்ளையில் ஈடுபட்ட நபர் கைது!

பழுதுபார்ப்பதற்காக நிறுத்திவைக்கப்பட்டிருந்த 40 இலட்சம் பெறுமதியுடைய காரொன்றை கொள்ளையிட்ட சந்தேகநபரொருவர் மிரிஹானை பிரதேசத்தில் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

மிரிஹானை பொலிஸ்பிரிவுக்குட்பட்ட பகுதியில் குறித்த சந்தேகநபர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

இவ்வாறு கைதுசெய்யப்பட்டவர் 42 வயதான மாளிகாவத்தை பிரதேசத்தைச் சேர்ந்தவராவார். சந்தேகநபரை விசாரணைக்குட்படுத்தியதில் அவரால் கொள்ளையிடப்பட்ட கார் மாளிகாவத்தை பகுதியில் கைப்பற்றப்பட்டுள்ளது.

குறித்தநபர் நேற்று நுகேகொடை நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டதுடன் அவரை எதிர்வரும் 13 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டது.

மேலதிக விசாரணைகளை மிரிஹானை பொலிஸார் முன்னெடுத்து வருவதாக பொலிஸ் ஊடகப்பிரிவு மேலும் தெரிவித்துள்ளது.