இந்திய அரசை பாராட்டிய பில் கேட்ஸ்

இந்தியாவில் டிஜிட்டல் காரணிகளைப் பயன்படுத்தி மக்கள் அனைவருக்கும் கொரோனா தடுப்பூசிகளை கொண்டு சேர்த்தது பாராட்டுக்குரியது என்று உலகப் பணக்காரர்களில் ஒருவரான பில் கேட்ஸ் (Bill Gates) கூறியுள்ளார்.

அண்மையில் நேர்காணல் ஒன்றில் கலந்து கொண்ட போது இதனை அவர் கூறியுள்ளார்.

அதில் உலகம் முழுவதிலும் உள்ள நாடுகள் எவ்வாறு கொரோனா பெருந்தொற்று காலங்களைச் சமாளித்தது என்று கலந்துரையாடியிருந்தார்.

அதில் குறிப்பாக இந்தியா குறித்து பேசிய அவர்,

தொலைத்தொடர்புகளுக்கு அப்பால் இருக்கும் கிராமங்களையும், கொரோனா தொற்றை சிறப்பாகக் கையாண்டது என்றும் ஆதார் போன்ற டிஜிட்டல் காரணிகளைப் பயன்படுத்தி மக்கள் அனைவருக்கும் தடுப்பூசிகளை கொண்டு சேர்த்தது பாராட்டுக்குரியது என்றும் கூறினார்.

முகக்கவசம் பற்றிக் கூறிய பில் கேட்ஸ்,

“மாஸ்க் ஒரு மேஜிக் பொருள். அது அசாத்தியமானது. கொரோனா பெருந்தொற்றை சமாளிக்க தடுப்பூசிகள் மற்றும் மனிதனின் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பல்வேறு மருத்துகள் தாயரிக்கப்பட்டன.

ஆனால் விலை மலிவான முகக்கவசம் கொரோனா பெருந்தொற்று பரவாமல் தடுக்க சிறப்பாக உதவியது என்றார்.