பிக்பாஸ் நிகழ்ச்சி 4-ன் மூலம் கலந்துகொண்டு மீண்டும் ரசிகர்களிடையே பிரபலமானவர் தான் கேப்ரில்லா சார்ல்டன்.
அந்த சீசனில் அவர் இறுதியில் 5 லட்சம் பணப் பெட்டி எடுத்துக்கொண்டு வெளியே சென்றார். பின்னர், ஈரமான ரோஜாவே சீரியலில் கதாநாயகியாக நடித்து வருகிறார்.
இந்நிலையில், கேபி சொந்தமாக புதிய காரான டாடா ஹாரியர் டார்க் எடிஷன் காரை வாங்கி இருப்பதாக அவர் இன்ஸ்டாகிராமில் புகைப்படங்கள் வெளியிட்டு இருக்கிறார்.
இதுகுறித்து அவர் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்திருப்பதாவது, “ பல மாத யோசனைக்கு பின், நான் புதிய காரை வாங்க முடிவு செய்தேன். அதிலும் நான் டாடா ஹேரியர் டார்க் எடிசன் காரை எனது முதல் காராக தேர்வு செய்து வாங்கியதில் எனக்கு மிகவும் மகிழ்ச்சி.
மேலும், இது உங்கள் அனைவரின் அன்பாலும் ஆதரவாலும் தான் சாத்தியமாகியுள்ளது.
இந்த பீஸ்ட் என்னைக் காக்க வந்திருக்கிறது. லவ் யூ ஆல்.. ஸ்ப்ரெட் லவ் என்று பதிவிட்டுள்ளார்.
View this post on Instagram