விக்ரம்
தமிழ் திரையுலகில் தனது மாறுபட்ட நடிப்பின் மூலம் தனக்கென்று தனி இடத்தை பிடித்து வைத்திருப்பவர் விக்ரம்.
இவருடைய நடிப்பில் சமீபத்தில் நேரடியாக ஓடிடி-யில் வெளிவந்த திரைப்படம் மஹான். இப்படம் ரசிகர்களின் எதிர்பார்ப்பை முழுமையாக பூர்த்தி செய்யவில்லை.
ஆனால், படத்தில் நடித்திருந்த நடிகர்களின் நடிப்பு வரவேற்பை பெற்றது. இதனை தொடர்ந்து விக்ரம் நடிப்பில் கோப்ரா திரைப்படம் விரைவில் திரையரங்கில் வெளியாகவுள்ளது.
சொத்து மதிப்பு
இந்நிலையில் நடிகர் விக்ரமின் முழு சொத்து மதிப்பு மட்டுமே சுமார் ரூ. 150 கோடி இருக்கும் என்று தகவல் வெளியாகியுள்ளது.
இது எந்த அளவிற்கு உண்மையான தகவல் என்று தெரியவில்லை. ஆனால், பெரிதும் திரை வட்டாரங்களில் கூறப்படுவது இவை தான்.