சிவகார்த்திகேயன் படத்தில் ஏன் நடிச்சோம்ன்னு நொந்து போன மனோபாலா..?

தமிழ் சினிமாவில் சாதிக்க துடிக்கும் பல இளைஞர்களுக்கு ஒரு உதாரணமாக இருப்பவர் தான் நடிகர் சிவகார்த்திகேயன். தொலைக்காட்சியில் நிகழ்ச்சி தொகுப்பாளராக இருந்து இன்று தமிழ் திரையுலகில் முன்னணி நடிகர்களில் ஒருவராக மாறியிருக்கிறார். இவர் இந்த முன்னணி நடிகர் என்ற அந்தஸ்தை பெற்றதுக்கு பின்னால் எவ்வளவு உழைப்பு உள்ளது என்பது நம் அனைவருக்குமே நன்றாக தெரியும்.

கடைசியாக சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான திரைப்படம் தான் டாக்டர் . இந்த படம் ரசிகர்கள் மத்தியில் சிறப்பான வரவேற்பை பெற்றது. மேலும் பாக்ஸ் ஆபிஸில் ரூ. 100 கோடி வரை வசூலித்தது.

இந்த நிலையில், சிவகார்த்திகேயன் நடிப்பில் வரும் மே 13ம் தேதி வெளியாக இருக்கும் திரைப்படம் டான். இதில் விஜய் டிவி பிரபலங்கள் பலரும் நடித்துள்ளார்கள், யார் யார் என்று போஸ்டர்களை பார்த்து ரசிகர்கள் பலரும் தெரிந்து கொண்டனர்.

மே 13ம் தேதி படம் திரையரங்குகளில் வெளியாகவுள்ள நிலையில் இன்று மாலை 7 மணியளவில் படத்தின் டிரைலர் வெளியாக இருக்கிறது. இந்த தகவலை சிவகார்த்திகேயன் படக்குழுவை டாக் செய்து டுவிட் செய்துள்ளார்.

ஆனால் அதில் படத்தில் நடித்துள்ள மனோபாலாவின் பெயரை டாக் செய்ய சிவகார்த்திகேயன் மிஸ் செய்துள்ளார். இந்த பதிவை பார்த்த மனோபாலா, அவரின் அந்த பதிவை ஷேர் செய்து மனோபாலா எனது பெயர் எங்க பா? என கேட்டுள்ளார். ஒரு வேலை ஏன் இந்த படத்தில் நடித்தோம்ன்னு அவரு மனம் வருந்தி இருப்பாரோ.? என்று சினிமா வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.