குழந்தைகளுக்கு மாலை நேரத்தில் செய்து கொடுக்க இந்த பிரெட் ரோல் ஏற்றது. இன்று இந்த ரெசிபியை செய்வது எப்படி என்று பார்க்கலாம் வாங்க..
தேவையான பொருட்கள்:
கடலைப்பருப்பு – அரை கப்
பொடித்த வெல்லம் – முக்கால் கப்
தேங்காய்த் துருவல் – அரை கப்
கேரட் துருவல் – 3 டேபிள்ஸ்பூன்
ஏலக்காய்த்தூள், சுக்குப் பொடி – தலா அரை டீஸ்பூன்
முழு பிரெட் – ஒன்று
நெய் – தேவையான அளவு.
செய்முறை:
கடலைப்பருப்பை அழுத்தும் பதத்தில் வேகவைத்து, ஆறியதும் மிக்ஸியில் விட்டுவிட்டு ஓடவிட்டு உதிர்த்து வைக்கவும்.
வாணலியில் ஒரு டீஸ்பூன் நெய்விட்டு கேரட் துருவலை ஈரப்பதம் போக வதக்கி, தேங்காய்த் துருவலைச் சேர்த்து சிறிது நேரம் வதக்கவும்.
இதனுடன் வெல்லம், ஏலக்காய்த்தூள், சுக்குப் பொடி சேர்த்து வெல்லம் இளகியதும் கடலைப்பருப்பைச் சேர்த்துக் கிளறி ஆறவைக்கவும்.
பிரெட்டை நீளவாக்கில் தேவையான எண்ணிக்கையில் ஸ்லைஸ் செய்து, ஓரம் நீக்கி தண்ணீரில் நனைத்து, துணியில் வைத்து அழுத்தி, தண்ணீர் நீக்கியதும் கடலைப்பருப்புக் கலவையை நடுவில் வைத்துச் சுருட்டவும். தோசைக்கல்லில் நெய்விட்டு டோஸ்ட் செய்யவும்.
இப்போது சுவையான பிரெட் ரோல் ரெடி.