கமத்தொழிலாளர்களுக்கு செய்த அநீதி காரணமாகவே நாட்டுக்கு தற்போதைய சாபம் ஏற்பட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் மகிந்த சமரவீர இன்று நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
சர்வதேச நாணய நிதியத்துடன் நடைபெற்ற பேச்சுவார்த்தை தொடர்பாக நிதியமைச்சர் ஆற்றிய உரை தொடர்பான விவாதத்தில் கலந்துக்கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.
மக்கள் மருந்து இன்றி இறக்கும் நிலைமை தற்போது உருவாகியுள்ளது. வெளிநாடுகளில் உள்ள இலங்கை மக்கள் நாட்டுக்கு தற்போது டொலர்களை அனுப்புவதில்லை.
அனுப்பு டொலர்களை கொள்ளையடிப்பார்கள் என்று நம்புவதன் காரணமாக அவர்கள் நாட்டுக்கு டொலர்களை அனுப்புவதில்லை. மக்களுக்கு தேவையான எரிபொருளை இறக்குமதி செய்ய வேண்டிய பணத்தில் வீதிகளுக்கு தார் விரிப்புகளை போட்டு செப்பனிட்டனர்.
இந்த அனைத்து பிரச்சினைகளுக்கு நாடாளுமன்றத்தில் இருக்கும் அனைவரும் பொறுப்புக் கூற வேண்டும். ஜனாதிபதி பதவிக்கு வரும் வீதிகளில் சுவர்களில் ஓவியங்களை வரைந்த இளைஞர், தற்போது வீதிகளில் இறங்கி போராடி வருகின்றனர்.
தற்போது ஏற்பட்டுள்ள நிலைமையை அடுத்த 50 வருடங்களில் மாற்ற முடியும் என நான் நினைக்கவில்லை. நாட்டில் வாழும் தாய்மார் மத்தியில் போஷாக்கின்மை ஏற்பட்டுள்ளது.
போஷாகின்மை அதிகரித்துள்ளது. பிள்ளைகளுக்கு குடிப்பதற்கு பால் மா இல்லாத நிலைமை ஏற்பட்டுள்ளது. இப்படியான சந்தர்ப்பத்தில் எவரும் குழம்பிய குட்டியில் மீன்பிடிக்க முயற்சிக்கக் கூடாது எனவும் மகிந்த அமரவீர கூறியுள்ளார்.