இந்தியா சென்றுள்ள வடமாகாண ஆளுநர்

இந்தியா சென்றுள்ள வடமாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா கர்நாடக மாநில தொழில்நுட்பம், உயர்கல்வி, அறிவியல் மற்றும் கர்நாடகாவின் தொழில்நுட்பம் வைத்தியர் சிஎன் அஷ்வத் நாராயணை சந்தித்துள்ளார்.

இச்சந்திப்பு நேற்று இடம்பெற்றுள்ளது.

வடமாகாணத்தை மையமாகக் கொண்டு இந்தியத் தகவல் தொழில்நுட்ப நிபுணத்துவத்தை இலங்கைக்குக் கொண்டு வருவது தொடர்பிலும் வடமாகாணத்தில் தற்போதுள்ள கல்வி முறைகளை வலுப்படுத்துதல் மற்றும் சீரமைத்தல் தொடர்பில் ஆராயப்பட்டது.

மேலும் வெளிநாட்டு மாணவர்களுக்காக வடமாகாணத்தில் இந்தியக் கல்வி நிறுவனங்களை அமைப்பது தொடர்பிலும் ஆராயப்பட்டது.