கியூபா ஓட்டலில் வெடிவிபத்து

கியூபாவின் ஹோட்டல் ஒன்றில் கியாஸ் கசிந்து ஏற்பட்ட விபத்தில் சிக்கி 30 பேர் படுகாயம் அடைந்தனர்.

வட அமெரிக்க நாடான கியூபாவின் தலைநகர் ஹவானாவில் சரடோகா என்ற ஹோட்டல் செயல்பட்டு வருகிறது.

இந்த ஹோட்டல் நேற்று காலை வழக்கம்போல் செயல்பட்டுக் கொண்டிருந்தது. அப்போது, திடீரென ஹோட்டலில் பயங்கர வெடிச்சத்தம் கேட்டது. அடுத்த சில நிமிடங்களில் ஹோட்டலின் ஒரு பகுதி இடிந்து விழுந்தது.

தகவலறிந்து மீட்புக்குழு அங்கு விரைந்து சென்றது. இடிபாடுகளில் சிக்கி படுகாயம் அடைந்த பலரை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர்.

இந்த விபத்தில் 8 பேர் பரிதாபமாக இறந்தனர். மேலும் 30 பேர் படுகாயம் அடைந்தனர்.

தொடர்ந்து, இடிபாடுகளில் சிக்கியுள்ளவர்களை மீட்கும் பணி தொடர்ந்து நடக்கிறது. விசாரணையில், ஹோட்டலில் சமையல் கியாஸ் கசிந்ததால் இந்த விபத்து நடந்தது தெரிய வந்துள்ளது.