திருகோணமலையில் வயல் காவலில் ஈடுபட்டுக்கொண்டிருந்த வயோதிபர் ஒருவர் பாம்பு தீண்டி உயிரிழந்துள்ளதாக சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்த சம்பவம் நேற்றைய தினம் (07-05-2022) திருகோணமலை திம்பிரிவெவ பகுதியில் இடம்பெற்றுள்ளது.
மேலும் இச்சம்பவத்தில் மாத்தளை பகுதியை சேர்ந்த 63 வயதான சுனில் என்பவரே உயிரிழந்திருப்பதாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
குறித்த சம்பவம் தொடர்பில் தெரியவருவது,
திம்பிரிவெவ பகுதியில் நேற்றையதினம் வயல் காவல் கடமையில் வயோதிபரொருவர் ஈடுபட்டு வந்துள்ளார்.
இந்த நிலையில் வயலுக்குள் நுழைந்த யானையை விரட்டுவதற்காக சென்றபோது அவரை பாம்பு தீண்டிய நிலையில் மஹதிவுல்வெவ பிரதேச வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும்போது உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மொரவெவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.