விவோ நிறுவனம் இந்தியாவில் புது Y சீரிஸ் ஸ்மார்ட்போன் மாடலை அறிமுகம் செய்வதற்கான பணிகளில் ஈடுபட்டு வருகிறது.
விவோ நிறுவனம் தனது Y75 4ஜி ஸ்மார்ட்போனினை இந்தியாவில் மே 22 ஆம் தேதி அறிமுகம் செய்ய இருப்பதாக அறிவித்து உள்ளது. ஸ்மார்ட்போனின் வெளியீட்டு தேதி அறிவிக்கப்பட்டுள்ளதோடு புது விவோ ஸ்மார்ட்போன் சிறப்பம்சங்கள் இணையத்தில் லீக் ஆகி இருக்கிறது.
அம்சங்களை பொருத்தவரை விவோ Y75 4ஜி மாடலில் 6.44 இன்ச் FHD+ AMOLED டிஸ்ப்ளே, வாட்டர் டிராப் நாட்ச் வழங்கப்படும் என தகவல் வெளியாகி உள்ளது. இத்துடன் மீடியாடெக் ஹீலியோ G96 பிராசஸர், 8GB ரேம், 128GB மெமரி, 50MP பிரைமரி கேமரா, 8MP இரண்டாவது கேமரா, 2MP மூன்றாவது கேமரா மற்றும் 44MP செல்பி கேமரா வழங்கப்பட்டு இருக்கிறது.
விவோ Y75 4ஜி எதிர்பார்க்கப்படும் அம்சங்கள்:
– 6.44 இன்ச் FHD+ AMOLED டிஸ்ப்ளே, வாட்டர் டிராப் நாட்ச்
– மீடியாடெக் ஹீலியோ G96 பிராசஸர்
– 8GB ரேம்
– 128GB மெமரி
– 50MP பிரைமரி கேமரா
– 8MP இரண்டாவது கேமரா
– 2MP மூன்றாவது கேமரா
– 44MP செல்பி கேமரா
– இன் டிஸ்ப்ளே கைரேகை சென்சார்
– 4020mAh பேட்டரி
– 44W பாஸ்ட் சார்ஜிங் வசதி
இந்தியாவில் விவோ Y75 5ஜி ஸ்மார்ட்போன் விலை ரூ. 20 ஆயிரம் பட்ஜெட்டில் துவங்குகிறது. அதன்படி புதிய விவோ Y75 4ஜி வேரியண்ட் விலை அதை விட குறைவாக நிர்ணயம் செய்யப்படும் என தெரிகிறது. இந்தியாவில் விவோ Y75 5ஜி ஸ்மார்ட்போன் இந்த ஆண்டு ஜனவரி மாத வாக்கில் அறிமுகம் செய்யப்பட்ட நிலையில், தற்போது இதன் 4ஜி மாடலும் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது.