தினமும் அரை மணி நேரம் சைக்கிள் ஓட்டினால், மூளையின் செயல்பாடுகள் அதிகரித்துச் சுறுசுறுப்பு உண்டாகும். மனஅழுத்தம், மனச்சோர்வு போன்ற பிரச்னை இருப்பவர்களுக்கு சிறந்த தீர்வு கிடைக்கும்.
இன்றைய நிலையில் நிறைய பெண்கள் அலுவலகப் பணியில் ஈடுபடுகின்றனர். இதனால் உடலுழைப்பு குறைவாகவே உள்ளது. காலை முதல் மாலை வரை இருக்கையில் ஒரே இடத்தில் உட்கார்ந்து இருப்பதன் மூலம் முதுகுப் பகுதியில் ரத்த ஒட்டம் சீராக இல்லாமல் வலியால் சிரமப்படுகின்றனர். இவர்களுக்கு சைக்கிள் பயிற்சி சிறந்த உடற்பயிற்சியாக அமையும். ரத்த ஓட்டத்தைச் சீராக வைப்பதற்கு உதவும்.
ஆண்களை விட, பெண்களுக்கு ஆர்வம் குறைவாக இருந்தாலும் இன்று அந்த நிலை மாறியுள்ளது. குறிப்பாக கல்லூரி செல்லும் பெண்களுக்கு அதிக அளவில் ஆர்வம் உள்ளது. திருமணத்திற்கு பிறகும்கூட தங்களை சரியான உடல் வாகுடன் வைத்துக்கொள்ளும் ஆசை, பெண்களுக்கு ஏற்பட்டு இருக்கிறது. இந்த நிலை மெல்ல மெல்ல அதிகரித்து வருவது நல்லது.
சைக்கிளிங் செய்வதன் மூலமும் கால்கள் வலுப்பெறுகின்றன. துடுப்பு படகு பயிற்சியானது உடல் முழுவதையும் சீர்படுத்துகிறது. இவ்வாறு தொடர்ந்து உடற்பயிற்சிகள் செய்வதன் மூலம், உடல் வளையும் தன்மை, வலிமை, எதையும் தாங்கும் உடல் திறன் பெறலாம். கால்களால் பெடல் செய்வது போன்ற பயிற்சிகள் கால்களை வலுவானதாக ஆக்குகிறது. ‘லாட் புல் டவுன்‘ கருவியில் பயிற்சி செய்வதால் மார்பு பகுதிகள் நன்கு விரிவடையும். ஸ்மித், ஆப்ஸ் கருவிகள் உடலின் பல பகுதிகளுக்கும் பயிற்சி செய்ய பயன்படுகிறது.
மார்பகப் புற்றுநோய், கர்ப்பப்பை வாய் புற்றுநோய் போன்றுவற்றுக்கான முக்கியமான காரணி, உடல்பருமன். சைக்கிள் ஓட்டுவதன்மூலம் உடல்பருமன் தடுக்கப்படுவதுடன் புற்றுநோய் ஏற்படுவதற்கான வாய்ப்புகளும் குறைகிறது.
சைக்கிள் ஓட்டுவதால் கால் தசைகள், தொடைப்பகுதி தசைகள், எலும்புப் பகுதிகள், முதுகுத் தண்டுவடம், இடுப்புப் பகுதி போன்றவை வலிமைபெறும்.
சைக்கிள் ஓட்டும்போது, இதயத்துடிப்பு சீராகும். வயது முதிர்வு காரணமாக ஏற்படும் இதய வலுவிழப்பு, இதய அடைப்பு போன்ற பிரச்னைகள் தடுக்கப்படும்.
தினமும் அரை மணி நேரம் சைக்கிள் ஓட்டினால், மூளையின் செயல்பாடுகள் அதிகரித்துச் சுறுசுறுப்பு உண்டாகும். மனஅழுத்தம், மனச்சோர்வு போன்ற பிரச்னை இருப்பவர்களுக்கு சிறந்த தீர்வு கிடைக்கும்.