இலகுவாக செய்ய கூடிய ஆரஞ்சு தோல் துவையல்

பித்தம், குமட்டல் போன்ற உடல் உபாதைகள் உள்ளவர்கள் அடிக்கடி இந்த துவையலை செய்து சாப்பிடலாம். இன்று இந்த துவையல் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்:

ஆரஞ்சு தோல் – 1 கப்
வெல்லம் – அரை கப்
மிளகாய் வற்றல் – 5
புளி கரைசல், உப்பு, எண்ணெய் – தேவையான அளவு.

செய்முறை:

ஆரஞ்சு தோலை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

வாணலியில், எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், மிளகாய் வற்றலை போட்டு வறுக்கவும்.

பின், பொடியாக நறுக்கிய ஆரஞ்சுப்பழத் தோலை போட்டு நிறம் மாறும் வரை வதக்கவும்.

நன்றாக வறுபட்டதும் ஆற வைத்து மிக்சியில் போட்டு அதனுடன் உப்பு, துருவிய வெல்லம், புளி கரைசல் சேர்த்து, நன்றாக அரைக்கவும்.

சுவைமிக்க, ‘ஆரஞ்சு தோல் துவையல்’ தயார்.

சூடான சாதத்துடன் பிசைந்து சாப்பிடலாம்.

நீண்ட நாட்கள் கெடாது. குளிர்சாதன பெட்டியில் வைக்க தேவையில்லை.