டிடி தமிழ் சினிமா தொலைக்காட்சியில் 10 வருடங்களுக்கு மேல் முன்னணி தொகுப்பாளராக இருப்பவர். காலத்திற்கு ஏற்ப தன்னை மாற்றிக்கொண்டு நிகழ்ச்சியையும் ரசிகர்களை இழுக்கும் வண்ணம் தொகுத்து வழங்குவார்.
அவர் இருக்கும் நிகழ்ச்சியில் காமெடிக்கு எப்போதுமே பஞ்சம் இருக்காது.
விக்ரம் ஆடியோ வெளியீட்டு விழா
கொரோனா காலத்தில் இருந்து டிடி எந்த ஒரு நிகழ்ச்சிக்கும் வருவது இல்லை. மாறாக வெளியூர் செல்வது, போட்டோ ஷுட் நடத்துவது என பிஸியாகவே உள்ளார்.
இந்த நிலையில் நேற்று சென்னையில் பிரம்மாண்டமாக நடந்த விக்ரம் ஆடியோ மற்றும் டிரைலர் வெளியீட்டு விழாவை தொகுத்து வழங்கி இருந்தார்.
டிடியின் நியூ லுக்
தற்போது டிடியின் புதிய வீடியோ ஒன்று வைரலாகிறது. அதாவது அவர் ஹேர் கட் செய்து புதிய ஹேர் ஸ்டைலில் உள்ளார். அந்த வீடியோ தான் ரசிகர்களிடம் வைரலாகி வருகிறது.
View this post on Instagram