இடைக்கால வரவு செலவு திட்டத்தை தயார் செய்யும் ரணில்

இலங்கையின் பொருளாதாரத்தை விரைவில் பழைய நிலைக்கு கொண்டு வரும் வேலைத்திட்டங்களை பிரதமர் ரணில் விக்ரமசிங்க முன்னெடுத்து வருகின்றனர்.

அந்நிய செலவாணியை பெற்றுக்கொள்ள பல வெளிநாடுகளின் உதவிகளை கோரியுள்ள நிலையில், அதற்க சாதகமான பதில்கள் கிடைத்துள்ளன.

இந்நிலையில் விரைவில் இடைக்கால வரவு-செலவுத்திட்டத்தை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்க பிரதமர் திட்டமிட்டுள்ளார்.

அதற்கு முன்னதாக நாடாளுமன்றத்தில் ஸ்திரமான அரசாங்கத்தை நிலைநிறுத்துவதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளார்.

கடந்த அரசாங்கத்தில் இருந்து வெளியேறி சுயதீனமாக செயற்படும் பத்து கட்சிகளை சேர்ந்த உறுப்பினர்களை இன்று காலை சந்தித்த பிரதமர் இந்தத் தகவலை வெளியிட்டுள்ளார்.

இதன்போது நாட்டைக் கட்டியெழுப்புவதற்கு எந்தவொரு அமைச்சுக்களையும் ஏற்காமல் அரசாங்கத்திற்கு ஆதரவளிப்பதாக சுயாதீனமான செயற்படும் கட்சி உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர்.

வீழ்ச்சி அடைந்து வரும் நாட்டின் பொருளாதாரத்தை மீட்கும் ரணில் நடவடிக்கைக்கு பலரும் ஆதரவு தெரித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.