ஆடை இல்லாமல் அந்தரங்க புகைப்படத்தை கேட்டு டார்ச்சர்! சித்ரா கணவரின் உண்மை முகம்

பிரபல சின்னத்திரை நடிகை சித்ராவின் மரணத்திற்கு அவரது கணவர் ஹேம்நாத் தான் காரணம் என்று பிரபல நடிகை கூறியுள்ளார்.

நடிகை சித்ரா

பிரபல சின்னத்திரை நடிகை சித்ரா கடந்த 2020ம் ஆண்டு டிசம்பர் 9ம் தேதி சென்னையில் தனியார் ஹோட்டலில் தங்கியிருந்த போது தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட நிலையில், இவரது இறப்பிற்கு உண்மை காரணம் தற்போது வரை வெளிவரவில்லை.

நடிகை சித்ரா ஹேம்நாத் என்பவரைக் காதலித்து பதிவு திருமணம் செய்திருந்த நிலையில், திருமணமாகிய 3 மாதத்தில் இந்த தற்கொலை அரங்கேறியுள்ளது.

சித்ராவின் பெற்றோர் மகளின் மரணத்திற்கு சரியான காரணம் வேண்டும் என்று கணவர் மீது பகார் கொடுத்த நிலையில், கடந்த 3 மாதங்களுக்கு முன்பு ஜாமீனில் வெளிவந்துள்ளார்.

வெளியே வந்த ஹேம்நாத் தனது உயிருக்கு ஆபத்து என்றும், சித்ரா மரணத்திற்கு ஒரு சில அரசியல் தலைவர்களும் ஒரு மாஃபியா கும்பலும் காரணம் என்று பகீர் குற்றச்சாட்டை வைத்தார். ஆனால் இந்த குற்றச்சாட்டு வழக்கை திரை திருப்பும் முயற்சி என்று கூறப்படுகின்றது.

நடிகை ரேகா நாயர்

சித்ராவின் நெருங்கிய தோழி மற்றும் சீரியல் நடிகையான ரேகா நாயர், ஹேம்நாத் குறித்து பல்வேறு திடுக்கிடும் உண்மைகளை கூறியுள்ளார். சித்ராவின் திருமணத்திற்கு முன்பே ஹேம்நாத் பல பெண்களை ஏமாற்றி கர்ப்பமாக்கியதுடன், ஏமாற்றப்பட்ட பெண்கள் தன்னிடம் கூறி கதறியழுததாகவும் கூறியுள்ளார்.

மேலும் சிறையில் இருந்து வெளியே வந்த ஹேமந்த், 3 மாதங்களில் 11 பெண்களுடன் தொடர்பில் இருப்பதாகவும் கூறிய ரேகா நாயர், ஹேமந்த் அந்த பெண்களுடன் நெருக்கமாக இருக்கும் போட்டோக்களையும் ஆதாரங்களாக காட்டியுள்ளார்.

அதுமட்டுமின்றி திருமணமான பெண்கள், இளம்பெண்கள் என பலரிடம் ஆடை இல்லாமல் புகை்பபடம் கேட்டும், போனில் அந்தரங்கமாக வீடியோ கால் வரவுமு் கேட்டுள்ளார். குறித்த ஆதாரங்கள் தேவைப்பட்டால் நீதிமன்றத்தில் ஒப்படைப்பேன் என்று கூறியுள்ளார்.

சித்ராவுடன் சேர்ந்து குளிக்கும் அளவிற்கு நெருக்கம் இருக்கும் போது சம்பவத்தன்று சித்ரா குளிக்கும் நேரத்தில் நான் ரூமை சாத்திவிட்டு வெளியே சென்றுவிட்டேன் என்று ஹேமந்த் சொல்வது சுத்த பொய் என்றும் பல உண்மைகளை உடைத்துள்ளார்.