மறுபிறவியில் இருந்து விலக்கு அளிக்கும் வழிபாடு

சிறுதவறுகளால் ஏற்படும் பாவ-புண்ணியங்களையும் களைந்து, மறுபிறவியை தவிர்ப்பதற்கு ஏதாவது வழி இருக்கிறதா? என்றால், நிச்சயமாக இருக்கிறது. அதற்கு நாம் செய்ய வேண்டியது ஒன்றுதான்.

ஆன்மிகத்தின் வழி நிற்கும் அனைவருக்கும் பாவபுண்ணியங்களில் இருந்து விடுபட வேண்டும் என்பதே ஒரே நோக்கம். அப்படி விடுபட்டால்தான், மறுபிறப்பு இன்றி முக்தியை அடைய முடியும் என்கின்றது ஆன்மிக நெறி. ஆனால் பிறப்பெடுத்த எந்த மனிதனாலும், ஏதாவது ஒரு வகையில் தவறு செய்யாமல் இருக்க இயலாது. அதனால் பாவ- புண்ணியம் சேரத்தான் செய்யும். அதைப் போக்க மறுபிறப்பு எடுத்துதான் ஆக வேண்டும்.

அப்படி சிறுதவறுகளால் ஏற்படும் பாவ-புண்ணியங்களையும் களைந்து, மறுபிறவியை தவிர்ப்பதற்கு ஏதாவது வழி இருக்கிறதா? என்றால், நிச்சயமாக இருக்கிறது. அதற்கு நாம் செய்ய வேண்டியது ஒன்றுதான். இறைவனிடம் எந்த எதிர்பார்ப்பும் இல்லாத பக்தியை செலுத்த வேண்டும். இதனை ‘நிஷ்காம்யம்’ என்பார்கள்.

அதாவது ‘வரம் கேட்காமல் இருப்பது’ என்பது அதன் பொருள். விருப்பு, வெறுப்பு இன்றி, எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் இறைவனிடம் பக்தி செலுத்துபவர்களுக்கு, நிச்சயமாக மறுபிறவியில் இருந்து விலக்கு அளிக்கப்படும்.