நடிகர் விஜய்சேதுபதியின் சம்பளம் குறித்து கசியும் தகவல்

விஜய் சேதுபதி நடிப்பில் சமீபத்தில் வெளியான காத்துவாக்குல ரெண்டு காதல் படத்தில் அவர் வாங்கிய சம்பளம் குறித்த தகவல் ஒன்று சமூக வலைத்தளத்தில் தீயாய் பரவி வருகிறது.

நடிகர் விஜய்சேதுபதி
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் நடிகர் விஜய் சேதுபதி, ஹீரோவாகவும் வில்லனாகவும், சிறப்பு வேடத்தில் என அனைத்திலும் கலக்கி வருகின்றார்.

தற்போது விக்ரம் படத்தில் கமலுக்கு வில்லனாக நடித்துள்ளார். முன்னதாக மாஸ்டர் படத்தில் விஜய்க்கு வில்லனாக நடித்திருந்தார்.

இதையடுத்து தற்போது சமீபத்தில் வெளியான காத்து வாக்கில் ரெண்டு காதல் படத்தில் நாயகனாக நடித்து பாராட்டுக்களை குவித்திருந்தார்.

சமந்தா, நயன்தாரா, விஜய் சேதுபதியின் முக்கோண காதலாக உருவான இந்த படம் நல்ல பாக்ஸ் ஆஃபீஸ் கலெக்சனை பெற்றது.