இலங்கையில் பணவீக்கம் அதிகரிப்பு!

அண்மைக்காலமாகவே ஒப்பீட்டளவில் இலங்கையில் பணவீக்கம் அதிகரித்து வருவதாக சர்வதேசப் புகழ்பெற்ற பொருளாதார நிபுணர் ஸ்டீவ் ஹான்கே (Steve Hanke) சுட்டிக்காட்டியுள்ளார்.

இலங்கை தனது கடனை திருப்பிச் செலுத்தத் தவறியதன் காரணமாகவே இந்த நிலைமை மோசமடைந்துள்ளதாக அவர் (Steve Hanke) வலியுறுத்தியுள்ளார். அதேசமயம் அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி 50 வீதத்தால் வீழ்ச்சியடைந்துள்ளதாக அவரது பொருளாதார ஆய்வு அட்டவணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவரது அவதானிப்புகளின் பிரகாரம், இலங்கையில் பணவீக்க விகிதம் 122 வீதத்தால் அதிகரித்துள்ளது.

அதேசமய்ம் இலங்கைப் பொருளாதாரம் ஆழமான படுகுழிக்குள் தள்ளப்பட்டிருப்பதாகவும், பணவீக்கத்தின் மோசமான சூழலை முடிவுக்குக் கொண்டு வந்து, மறைமுகப் பொருளாதாரச் சரிவை ஏற்படுத்த மத்திய வங்கி உடனடியாகத் தலையிட வேண்டும் என்றும் ஸ்டீவ் ஹாங்க் (Steve Hanke) தெரிவித்துள்ளார்.