45ஆவது நாளாகவும் தொடரும் காலி முகத்திடல் போராட்டம்

நாட்டில் இடம்பெற்றுள்ள அசாதாராண சூழ்நிலைக்கு காரணமான அரசாங்கத்தை பதவி விலகுமாறு கோரி கொழும்பு- காலிமுகத்திடலில், பொதுமக்கள் தொடர்ந்தும் 45ஆவது நாளாக ஆர்ப்பாட்டத்தினை முன்னெடுத்து வருகின்றனர்.

அரசாங்கத்திற்கு எதிரான இந்த ஆர்ப்பாட்டமானது கடந்த ஏப்ரல் 09ம் திகதி ஆரம்பிக்கப்பட்டது.

இதேவேளை கடந்த மே-09ம் திகதி இடம்பெற்ற வன்முறையின்போது காலிமுகத்திடல் ஆர்ப்பாட்டகாரர்களின் மீது தாக்குதல்கள் நடத்தப்பட்டன.

ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்ட இடத்தில் அரச ஆதரவாளர்களால் வன்முறைகள் தோற்றுவிக்கப்பட்டதை அடுத்து முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்ச பதவி விலகியிருந்தார்.

இதேவேளை மகிந்த ராஜபக்ச பதவி விலகினால் மட்டும் போதாது, கோட்டாபய மற்றும் ரணில் விக்ரமசிங்க ஆகியோரும் உடனடியாக பதவி விலகுமாறு கோரி தற்போது ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடும் பொதுமக்கள் தற்போது வலியுறுத்தி வருகின்றனர்.