அன்றாடம் காலையில் எழுந்தவுடன் பல் துலக்குவோம். ஒரு நாளைக்கு காலை, இரவு என இரண்டு வேலை பல் துலக்குவது தான் சிறந்தது.
அப்படி பல் துலக்குவது மட்டுமில்லாமல் மாதம் ஒரு முறையாவது ப்ரஷை மாற்ற வேண்டியது கட்டாயமான ஒன்று.
எந்தவொரு டூத் பிரெஷ்ஷிற்கும் எந்த விதமான காலாவதி தேதியும் கிடையாது.
ஆனால், நீங்கள் அதைத் பயன்படுத்தத் தொடங்கியவுடன், உங்கள் டூத் பிரெஷ்ஷின் வாழ்க்கை சுழற்சி 3 முதல் 4 மாதங்கள் வரை மட்டுமே ஆகும்.
அப்படி மீறி அதில் துலக்கும் போது, உங்கள் பற்களில் படிந்துள்ள பிளேக்கை அகற்ற முடியாது
உங்கள் டூத் பிரெஷ் எவ்வளவுக்கு எவ்வளவு தேய்மானம் அடைகிறதோ அந்த அளவிற்கு அது பிளேக்கை அகற்றுவதில் திறமையற்றதாக மாறும்.
அதேப்போல், பலரும் பிரஷ்ஷை குளியல் அறையில் வைத்திருப்பார்கள்.
பிரஷ் செய்துவிட்டு, சுத்தம் செய்துவிட்டு அப்படியே குளியல் அறையில் திறந்த நிலையில் வைத்துவிடுவார்கள்.
இது தவறானது. குளியல் அறையில் உள்ள கிருமிகள் ஈரப்பதத்துடன் இருக்கும் பிரஷ்ஷில் வளர்ச்சி அடையலாம்.
எனவே, வேறு அறையில் மிகவும் மூடப்பட்ட நிலையில் பிரஷ்ஷை வைப்பது நல்லது.