யாழ்ப்பாணத்தில் கடந்த 2ஆம் திகதி முதல் 20ஆம் திகதி வரையிலான காலப்பகுதியில், ஒக்டேன்- 92 பெற்றோல் 16 இலட்சத்து 10ஆயிரத்து 400 லீட்டர் விநியோகிக்கப்பட்டுள்ளதாக யாழ்.மாவட்ட செயலர் க.மகேசன் தெரிவித்துள்ளார்.
அத்துடன் இக் கால பகுதியில் டீசல் 8 இலட்சத்து 81 ஆயிரத்து 100 லீட்டரும் மண்ணெண்ணெய் 4 இலட்சத்து 48 ஆயிரத்து 800 லீட்டரும் சூப்பர் டீசல் ஒரு இலட்சத்து 25 ஆயிரத்து 400 லீட்டரும் விநியோகிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
எனினும் பெற்றோல் ஒக்டேன் 95 அக் கால பகுதியில் விநியோகிக்கப்படவில்லை. அதேவேளை 14ஆம் திகதிக்கு பின்னர் மண்ணெணெய் விநியோகம் இடம்பெறவில்லை.
அத்துடன் பெற்றோல் கடந்த 14ஆம் திகதி அதிக பட்சமாக ஒரே நாளில் 2 இலட்சத்து 11 ஆயிரத்து 200 லீட்டர் விநியோகிக்கப்பட்டுள்ளதுடன் , 20ஆம் திகதியும் ஒரு இலட்சத்து 65 லீட்டர் பெற்றோல் விநியோகிக்கப்பட்டதாகவும் யாழ்.மாவட்ட செயலர் தெரிவித்தார்.