20 வயதுக்கு மேற்பட்டவர்கள் இன்று கொரோனா தடுப்பூசியின் நான்காவது டோஸை செலுத்திக்கொள்ள முடியும் என தெரிவிக்கப்படுகின்றது.
இத்தகவலை கொழும்பு பிராந்திய தொற்றுநோய் நிபுணர் டாக்டர் டினு குருகே தெரிவித்தார்.
அதேசமயம் நான்காவது டோஸை செலுத்திக்கொள்ளவுள்ளவர்கள் , கொரோனா வைரஸுக்கு எதிரான முதல், இரண்டாவது மற்றும் மூன்றாவது டோஸ்களை பெற்றிருத்தல் வேண்டும். அத்துடன் , கடைசி தடுப்பூசி செலுத்தி மூன்று மாதங்கள் நிறைவடைந்திருக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்படுகின்றது.
அதன்படி இன்று காலை 9.00 மணி முதல் மதியம் 12.30 மணி வரை தடுப்பூசி போடும் பணி நடைபெறும். அதேவேளை , 20 – 60 வயதுக்கு இடைப்பட்டவர்களுக்கும், நோயெதிர்ப்பு குறைபாடு மற்றும் நாள்பட்ட கோளாறுகள் உள்ளவர்களுக்கும் நான்காவது டோஸ் பரிந்துரைக்கப்படுகின்றதாக டாக்டர் குருகே மேலும் தெரிவித்தார்.