இலங்கையில் தற்போதைக்கு அமல்படுத்தப்படும் மின் துண்டிப்பை முற்றாகக் கைவிடுவதாயின் மாதந்தோறும் 100 மில்லியன் அமெரிக்க டொலர்கள் தேவைப்படுவதாக அமைச்சர் காஞ்சன விஜேசேகர (Kanchana Wijesekera) தெரிவித்துள்ளார்.
நீர் மின்சாரம் அல்லது அனல் மின்சாரம் எந்த வகையிலாவது 24 மணிநேரமும் மின்சாரத்தை வழங்குவது தற்போதைக்கு முடியாத காரியம்.
அவ்வாறு வழங்குவதாயின் 31000 மெட்ரிக் தொன் டீசல், 63000 மெட்ரிக் தொன் எஞ்சின் ஒயில் மற்றும் 11000 மெட்ரிக் தொன் நெப்னா என்பன தேவைப்படும்.
அவற்றைப் பெறுவதாயின் மாதந்தோறும் 100 மில்லியன் அமெரிக்க டொலர்கள் தேவைப்படும் என்றும் அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.